உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

 மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

சென்னை: கொரட்டூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி, மணல் கடத்தி வந்த இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொரட்டூர், வாட்டர் கேனால் சாலையில், நேற்று முன்தினம் காலை, மணல் கடத்தி வந்த இரண்டு டிப்பர் லாரிகளை, துணை தாசில்தார் தடுத்து நிறுத்தினார். லாரிகளை விட்டுவிட்டு, ஓட்டுநர்கள் தப்பி ஓடினர். உரிய ஆவணங்கள் இன்றி, 6 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களை, கொரட்டூர் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி