உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்கூட்டியில் சென்ற லாரி ஓட்டுனர் திடீர் மரணம்

ஸ்கூட்டியில் சென்ற லாரி ஓட்டுனர் திடீர் மரணம்

கொடுங்கையூர், கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 8வது பிளாக்கைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 49; லாரி ஓட்டுனர். நேற்று அதிகாலை, டி.வி.எஸ்., ஸ்கூட்டியில், மூலக்கடை மேம்பாலத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சட்டென, டூ - வீலர் நிலைதடுமாறிய நிலையில், முன்பக்கம் சாய்ந்தவாறு கீழே விழுந்துள்ளார். இதில், டூ - வீலரின் கண்ணாடி கம்பி, ஜெயகுமாரின் மார்பு பகுதியில் குத்தியுள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.தகவலறிந்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்தவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை