லாரி கவிழ்ந்து பழுதுநீக்கும் ஊழியர் பலி
பூந்தமல்லி,திருவண்ணாமலையை சேர்ந்தவர் அஜித், 28. பூந்தமல்லி - நெடுஞ்சாலை, பாரிவாக்கத்தில் தனியார் வாகனங்கள் சர்வீஸ் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, பழுது நீக்க வந்திருந்த லாரியின் கீழ்பகுதியில் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென லாரியின் முன்பகுதி, அஜித் மீது கவிழுந்து, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். இச்சம்பவம் குறித்து, பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.