லாட்டரி சீட்டு விற்றவர் கைது
சென்னை, சென்னை, அமைந்தகரை மேத்தா நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன், 27. இவர், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம், சுதந்திர தின பூங்கா அருகே, வெளி மாநில லாட்டரி சீட்டு எண்களை, துண்டு சீட்டில் எழுதி விற்றுள்ளார். இவரை, நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து, மொபைல் போன் மற்றும் துண்டு சீட்டாக பயன்படுத்தப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.