உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எல்லா பிரச்னைக்கும் அன்பே தீர்வு

எல்லா பிரச்னைக்கும் அன்பே தீர்வு

தி.நகர், பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் தி.நகரில் நேற்று 'உலகளாவிய கலாசாரம் - அன்பு, அமைதி, நல்லிணக்கம்' என்ற விழா நடந்தது. இதில், பிரம்ம குமாரிகள் கலை, கலாசார பிரிவு தலைவர் சந்திரிகா தீதி பேசியதாவது:நம் மீது நாம் அன்பு மற்றும் மரியாதை கொள்வதில்லை. உங்களை போல் வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லை. நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள். அதனால், உங்களை நீங்கள் பாராட்ட வேண்டும். மற்றவர்களுடன் உங்களை எப்போதுமே ஒப்பிட வேண்டாம்.இந்த சமுதாயத்தின் மீதும், நாட்டின் மீதும் அன்பு காட்டுங்கள். அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு அன்பு மட்டுமே.மனிதர்களுக்குள், நாடுகளுக்குள் வேறுபாடு இருப்பதற்கு காரணம், அன்பு இல்லாமல் போனது தான். நல்ல கல்வி, வேலை, குடும்பம், குழந்தைகள் என அனைத்தும் இருந்தும் அமைதியில்லை. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில், பின்னணி பாடகி ஜனனி இசையமைத்த 'ஆழ் மனசுக்குள்ளே...' என்ற பாடல் வெளியிடப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் பீனா, இயக்குனர் பாக்யராஜ், தமிழக அரசு கலை பண்பாட்டு துறை துணை இயக்குனர் ஹேமநாதன், ஜெ.பி.கிரியேஷன்ஸ் நிறுவனர் ஆடிட்டர் ஜெயராமன் பாலசுப்ரமணியன், நடிகர் சக்தி வாசு ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ