மேலும் செய்திகள்
பஸ் ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது
29-Oct-2026
தனியார் எஸ்டேட் ஓடை: காட்டு யானை உயிரிழப்பு
05-Nov-2026
அம்பத்துார்: காருக்குள் இறந்து கிடந்த மதுரையைச் சேர்ந்த திருமலை, 31, என்ற ஓட்டுநரின் உடலை, போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். அம்பத்துார் உழவர் சந்தை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில், ஓட்டுநர் இருக்கையில் இருந்தபடி, ஒருவர் இன்று (நவ.,11) மயங்கி கிடந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள், இது குறித்து போலீஸ் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்தது தெரிந்தது. உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், இறந்த நபர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருமலை என தெரிந்தது. கார் ஓட்டுனரான இவர், அம்பத்துாரில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி, கார் ஓட்டி வந்ததும் தெரிந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே, உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும் என, அவர்கள் தெரிவித்தனர்.
29-Oct-2026
05-Nov-2026