உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லட்சுமி குபேர தியான மண்டபத்திற்கு வரும் 6ம் தேதி மகா கும்பாபிஷேகம்

லட்சுமி குபேர தியான மண்டபத்திற்கு வரும் 6ம் தேதி மகா கும்பாபிஷேகம்

சென்னை, வண்டலுார் அடுத்த, ரத்தினமங்கலத்தில் லட்சுமி குபேரரை மூலவராக கொண்டு தியான மண்டபம் கட்டப்பட்டப்பட்டுள்ளது. மேலும், செல்வமுத்து குமரன், ஹனுமான், 16 வகையான ஷோடச கணபதி, நவக்கிரஹ சன்னிதிகளும் நிர்மானிக்கப்பட்டுள்ளன.இந்த தியான மண்டபத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், நாளை மறுநாள் நடக்கிறது. அதை முன்னிட்டு, இன்று காலை முதல் யாகசாலை வளர்க்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரஹ ஹோமங்கள், வாஸ்து சாந்தி நடக்கிறது. தொடர்ந்து புதிய விக்ரஹங்களுக்கு விழி திறத்தல் நிகழ்வு நடக்கிறது.நாளை காலை, இரண்டாம் கால பூஜை, பூர்ணாஹுதி நடக்கிறது. யாகசாலை பூஜை நேரங்களில் வேத சவாகம, திருமுறை பாராயணங்கள் நடத்தப்படுகின்றன. கும்பாபிஷேக நாளான, நாளை மறுநாள், காலை 5:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நான்காம் காலபூஜை, நாடிசந்தானம், மகா பூர்ணாஹுதி நடக்கிறது.காலை 7:30 மணிக்கு யாத்ரா தானம் நிறைவடைந்து, கலச புறப்பாடு நடக்கிறது. காலை 8:15 மணிக்கு லட்சுமி குபேரர் மற்றும் பரிவார விமானங்களுக்கு கலசநீர் சேர்த்து மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.இதையடுத்து, மகா அபிஷேகம், மகா தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ராஜலட்சுமி குபரோ டிரஸ்ட் கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ