உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரதான சாலை பராமரிப்பு பணி தீபாவளி பண்டிகை வரை தடை

பிரதான சாலை பராமரிப்பு பணி தீபாவளி பண்டிகை வரை தடை

சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணியர் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. கூடுதல் பேருந்துகள் இயக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து, உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. அது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசின் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், தலைமை செயலர் முருகானந்தம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜி.எஸ்.டி., சாலை, சென்னை - பெங் களூரு சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் தற்போது நடந்து வரும் பராமரிப்பு பணிகளை, உடனடியாக முடிக்க வேண்டும். புதிதாக பராமரிப்பு மற்றும் மேம்பால பணிகளை தீபாவளி பண்டிகை காலம் முடியும் வரை, தற்காலிகமாக ஒத்திவை க்க வேண்டும். கூடுதல் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்காக, வண்டலுார் - படப்பை சாலையில் கரசங்கால் பகுதியில் நிலத்தை வாடகைக்கு எடுத்து உரிய வசதிகளை சி.எம்.டி.ஏ., செய்ய வேண்டும். கிளாம்பாக்கத்தில் இருந்து மக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல, புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த உரிய சிறப்பு வசதிகளை சி.எம்.டி.ஏ., ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தீபாவளி பண்டிகையின்போது தேவைப்படும் சிறப்பு ரயில்கள் எண்ணிக்கை குறித்து போக்குவரத்து குழுமமான 'கும்டா' ஆய்வு செய்து மதிப்பீட்டு அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ