உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 144, 146, 147 வார்டுகளில் பராமரிப்பு பணி

144, 146, 147 வார்டுகளில் பராமரிப்பு பணி

சென்னை:மெட்ரோ ரயில் பணிக்காக, கோயம்பேடு, காளியம்மன் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் குழாய் இணைக்கும் பணி நடக்க உள்ளது.இதனால், 28, 29ம் தேதிகளில், கங்கா நகர், பல்லவன் நகர், பலராமன் நகர், கணபதி நகர் மற்றும் சி.எம்.டி.ஏ., கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது.இதன் காரணமாக, வளசரவாக்கம் மண்டலம், 144, 146, 147 ஆகிய வார்டுகளில், இயந்திர நுழைவு வாயில் வழியாக, கழிவுநீர் வெளியேற வாய்ப்புள்ளது.இப்பிரச்னை ஏற்பட்டால் 81449 30911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் வழியாக பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை