10,000 குடும்பங்களை அகதிகளாக்குவதா?
ஆவடி அருகே, 'சிப்காட்' நில வங்கி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வெள்ளானுார், கும்மனுார் ஆகிய இரு கிராமங்களும், சென்னை வெளிவட்ட சாலைக்கு அருகில் உள்ளன. இங்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், 10,000 குடும்பங்கள் அப்பகுதியை விட்டு அகதிகளாக வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.மக்கள் குடியிருக்கும் வீடுகள், வீட்டு மனைகள், சுடுகாடு உள்ளிட்ட நிலங்களையும் கையகப்படுத்த, சிப்காட் நிர்வாகம் துடிப்பது பொதுமக்கள் மீது நடத்தப்படும் ஈவு இரக்கமற்ற கொடிய தாக்குதல். சிப்காட் நில வங்கிக்காக பயன்படாத நிலங்களை கையகப்படுத்த வேண்டும். வெள்ளானுார், கும்மனுார் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், பாதிக்கப்படும் மக்களை திரட்டி, பா.ம.க., போராட்டம் நடத்தும்.-- - அன்புமணி, பா.ம.க., தலைவர்.