மேலும் செய்திகள்
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்
29-Mar-2025
எண்ணுார்,:எண்ணுாரைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் பெற்றோர், கடந்த 1ம் தேதி வேலைக்கு சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த சிறுமி, வேலைக்கு சென்ற தாயிடம் பேசுவதற்காக, பக்கத்து வீட்டில் வசிக்கும் சிவராமன், 41, என்பவரிடம், மொபைல் போன் கேட்டுள்ளார். அதற்கு, வீட்டிற்குள் வந்தால் தருவதாக கூறி, சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி, வீட்டை விட்டு வெளியேறி, தனது வீட்டிற்கு வந்து விட்டார். மாலையில், பெற்றோர் வேலை முடித்து வீட்டிற்கு வந்தபோது, நடந்தவற்றை கூறியுள்ளார். ஆத்திரமடைந்தவர்கள், சிவராமனை தேடி வீட்டிற்கு சென்றனர். விஷயம் தெரிந்த அவர் தலைமறைவாகி விட்டார்.இது குறித்து, எண்ணுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிவராமனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை யாருக்கும் தெரியாமல் சிவராமன் வீட்டிற்கு வந்துள்ளார். இது குறித்து, அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலிபடி, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், அவரது வீட்டிற்கு சென்று, தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார், அவரை கைது செய்து விசாரணைக்கு பின், சிறையில் அடைத்தனர்.
29-Mar-2025