உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெயரை மாற்றி 24 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தவர் கைது

பெயரை மாற்றி 24 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தவர் கைது

திருவொற்றியூர்,வழிப்பறி திருட்டில் ஈடுபட்டு, 24 ஆண்டுகள் போலீசுக்கு பிடிகொடுக்காமல் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் பகுதியில், 2001 பிப்., 10ம் தேதி, சாலையில் நடந்து சென்ற மணி என்பவரை, கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த வழக்கில், திருவொற்றியூர் போலீசார் முனுசாமி என்ற முனியாண்டி உள்ளிட்ட நான்கு பேரை, கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், பிணையில் வெளிவந்த முனுசாமி, திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், 24 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், மார்ச் 27ல், குற்றவாளியை பிடித்து ஆஜர்படுத்துமாறு, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன்படி, திருவொற்றியூர் போலீசார், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் பதுங்கியிருந்த முனியாண்டி, 50, என்பவரை, நேற்று கைது செய்தனர். விசாரணையில், விஜயசாரதி என பெயர் மாற்றம் செய்து, தலைமறைவாக வசித்தது தெரியவந்தது. பின், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, உரிய சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை