உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறியவர் கைது

திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறியவர் கைது

சென்னை, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், கடற்கரை ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவர், கடந்த 28ம் தேதி இரவு பணி முடிந்து, திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே நடந்து வந்த நபர், திடீரென அப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், ரயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் தனிப்படை அமைத்து, குற்றவாளியை தேடி வந்தனர்.இந்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளி பேசின்பாலம் ரயில் நிலையத்தில் நிற்பது, நேற்று முன்தினம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, விரைந்து சென்று, அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த டில்லிபாபு, 34, என்பதும், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிவதும் தெரியவந்து. மேலும், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, ரயில்வே போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ