உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பார்க்கிங் தகராறு பெண்ணை தாக்கியவர் கைது

பார்க்கிங் தகராறு பெண்ணை தாக்கியவர் கைது

கொரட்டூர்:கொளத்தூர், வனசக்தி தெரு விரிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சங்கீதா, தனியார் 'டிவி' நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவர், பணி முடிந்து நேற்று வீடு திரும்பியுள்ளார். அவரது ஸ்கூட்டியை, குடியிருப்பின் கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதே குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசிக்கும், சாந்தகுமார், 38, என்பவர், சங்கீதாவின் ஸ்கூட்டியை வெளியே அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அவரது காரை அங்கு நிறுத்தியுள்ளார்.ஸ்கூட்டியை அப்புறப்படுத்தியது குறித்து, சாந்தகுமாரிடம் முறையிட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் சங்கீதாவை, சாந்தகுமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முகத்தில் காயம் ஏற்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், சங்கீதா முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர், சங்கீதா அளித்த புகாரின்படி, கொரட்டூர் போலீசார் வழக்கு பதிந்து, சாந்தகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி