உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பீர் பாட்டிலால் தாக்கி நண்பரை கொன்றவர் கைது

பீர் பாட்டிலால் தாக்கி நண்பரை கொன்றவர் கைது

கானத்துார் :டாஸ்மாக் மதுக்கூடத்தில் ஏற்பட்ட தகராறில், மதுபோதையில் நண்பரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்தவரை, போலீசார் கைது செய்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் இம்மானுவேல், 56. கானாத்துரைச் சேர்ந்தவர் ரகுபதி, 37. நண்பர்களான இருவரும், நேற்று இரவு, கானத்துாரில் உள்ள ஒரு 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ரகுபதி, 37, பீர் பாட்டிலால் இம்மானுவேலை குத்தி கொலை செய்தார். கானத்துார் போலீசார், ரகுபதியை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை