உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில் நிலைய மேலாளரை தாக்கியவர் கைது

ரயில் நிலைய மேலாளரை தாக்கியவர் கைது

சென்னை, தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 25; ஓமந்துாரார் அரசினர் தோட்ட மெட்ரோ ரயில் நிலைய மேலாளர். நேற்று முன்தினம் காலை பணியிலிருந்த போது, ரயில் நிலையத்திற்கு வந்த 25 வயது பெண்ணிடம், மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக பேசி கிண்டல் அடித்துள்ளார். இதை பார்த்த மேலாளர், மர்ம நபரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தநபர், மேலாளரை கையால் அடித்து, கீழே கிடந்த இரும்பு கம்பியால் அவரை தாக்கி, தப்பிச் சென்றார். மேலாளர் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், காஞ்சிபுரம் மாவட்டம் கொளுத்துவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கிஷோர்குமார், 40, என்பவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி