உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வீட்டின் பூட்டை உடைத்து சிலிண்டர் திருடியோர் கைது

 வீட்டின் பூட்டை உடைத்து சிலிண்டர் திருடியோர் கைது

செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி சுனாமி நகரை சேர்ந்தவர் கன்னியம்மாள், 40. நேற்று முன்தினம், இவர் வீட்டின் பூட்டை உடைத்து, இரண்டு சிலிண்டர் மற்றும் வெள்ளி நகை திருடப்பட்டது. செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன், 22, ரிஷி, 22, சூர்யா, 21, என தெரிந்தது. நேற்று மூவரையும் கைது செய்த போலீசார், இரண்டு சிலிண்டர்கள் மற்றும் வெள்ளி நகையை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ