உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  காதலிக்க மறுத்த மாணவியை அவதுாறாக பேசியவர் கைது

 காதலிக்க மறுத்த மாணவியை அவதுாறாக பேசியவர் கைது

ஆலந்துார்: பரங்கிமலை மகளிர் தங்கும் விடுதியில் தங்கி, தனி யார் கல்லுாரி ஒன்றில், 20 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன், அதே கல்லுாரியில் படிக்கும் பட்டுகோட்டையை சேர்ந்த ராஜிக் முகமது, 20, என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் கண்டித்த தால் ராஜிக் முகமதுவிடம் பழகுவதை அம்மாணவி நிறுத்தியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லுாரி முடித்து, ஆலந்துார் ரயில் நிலைய சாலை வழியாக, அம்மாணவி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ராஜிக் முகமது, அம்மாணவியிடம் மீண்டும் பழக வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாணவி மறுக்கவே, அவரை தகாத வார்த்தைகளால் பேசி, கீழே தள்ளி, மிரட்டல் விடுத்து சென்றார். புகாரின்படி, பரங்கிமலை போலீசார் வழக்கு பதிந்து, ராஜிக் முகமதுவை கைது செய் து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ