மேலும் செய்திகள்
ரூ.10 லட்சம் மோசடி ஐந்து பேர் கைது
09-Sep-2025
சென்னை, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, 22.30 கோடி ரூபாய் மோசடி செய்தவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஸ்வேதரன்யன், 76. சில மாதங்களுக்கு முன், போலியான ஆன்லைன் வர்த்தக தளத்தில் முதலீடு செய்து, 22.30 கோடி ரூபாயை இழந்தார். இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். புகார்தாரிடம் இருந்து பெற்ற தொகையில், 1.40 கோடி ரூபாய், குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் உள்ள பந்தன் வங்கியில், 'ஸ்ரீ உமியா வாட்டர் பியூரிபிகேஷன்' என்ற பெயரிலான கணக்கில் செலுத்தப்பட்டது தெரிய வந்தது. போலியான ஆவணங்களை பயன்படுத்தி, மர்ம நபர்கள் வங்கி கணக்கு துவக்கியதும் கண்டறியப்பட்டது. மேலும், மார்ச் - ஏப்ரலில், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வரவு வைக்கப்பட்டு, பெரும்பகுதி பணமும் திரும்பப் பெறப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. தொடர்ந்து செப்., 3ல், ஆமதாபாத் சென்ற சைபர் கிரைம் போலீசார், மோசடியில் ஈடுபட்ட படேல் ஜே, 28, என்பவரை கைது செய்தனர். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டலாம் என, ஆசைகாட்டி மோசடி செய்தது தெரிய வந்தது. கைதானவரை, ஆமதாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், உரிய சட்ட நடவடிக்கைகளுக்குப் பின், சென்னைக்கு நேற்று முன்தினம் அழைத்துவரப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மோசடியில் மீத பணம் எங்கே போனது என்பது குறித்து, கைதான படேல் ஜேவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட படேல் ஜே மீது, தமிழகம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, டில்லி, கோவா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், 31 மோசடி புகார்கள் பதிவாகி உள்ளது.
09-Sep-2025