குடிக்க பணம் கேட்டு தாக்கியவர் கைது
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, ஆடுதொட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 38. இவர் கடந்த 1ம் தேதி, ஆடுதொட்டியில் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்.அங்கு வந்த வேலு என்பவர், குடிப்பதற்கு பணம் கேட்டு ராஜேஷிடம் தகராறு செய்துள்ளார். பின், அங்கிருந்த கட்டையை எடுத்து பலமாக தாக்கியுள்ளார்.அக்கம்பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் கிடந்த ராஜேஷை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், ஓட்டேரி, நியூ பேரண்ட்ஸ் சாலையைச் சேர்ந்த வேலு, 27, என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.