கத்திமுனையில் பணம் பறித்தவர் பிடிபட்டார்
காசிமேடு, ஆந்திரா, நெல்லுாரைச் சேர்ந்தவர் ஜகத் பாபு, 32; மீனவர். சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், ரமேஷ் என்பவரிடம் மீன்பிடி வேலை செய்து வருகிறார்.கடந்த 21ம் தேதி இரவு, ஜகத்பாபு தன்னுடன் வேலை செய்யும் பாபு என்பவருடன் மீன்பிடித்துறைமுகம் பகுதியில் நிறுத்தியுள்ள படகில் துாங்கியுள்ளார்.அப்போது, அங்கு வந்த மூன்று பேர், ஜகத் பாபு மற்றும் பாபுவை தட்டியெழுப்பி, கத்தி முனையில் 5,000 ரூபாய் பறித்து தப்பிச் சென்றனர்.இது குறித்து, காசிமேடு மீன்பிடித்துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கருப்பசாமி, 19, என்பவரை, நேற்று கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.