உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டீக்கடை காரரிடம் பணம் பறித்தவர் கைது

டீக்கடை காரரிடம் பணம் பறித்தவர் கைது

அமைந்தகரை, சென்னை பாடி, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராஜா, 27. இவர் அமைந்தகரை பி.பி., கார்டன், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் டீ கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற நபர், பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்கவில்லை.இதில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ராஜாவை தாக்கி, அவரிடம் இருந்த 850 ரூபாயை பறித்து தப்பி சென்றார்.இதுகுறித்த புகாரின்படி அரும்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், ரகளையில் ஈடுபட்டது அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையை சேர்ந்த சூர்ய நாதன், 20 என, தெரியவந்தது. பழைய குற்றவாளியான அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை