உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மாத்திரை வைத்திருந்தவர் கைது

போதை மாத்திரை வைத்திருந்தவர் கைது

சென்னை, ஐஸ்ஹவுஸ் போலீசார், நேற்று மதியம் ராயப்பேட்டை முத்தையா தோட்ட தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து, அவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.இதில், 150 போதை மாத்திரை வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, போதை மாத்திரை வைத்திருந்த, அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய்குமார், 24, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி