காவலாளியிடம் மொபைல் போன் பறித்தவர் கைது
சைதாப்பேட்டை: நவ. 5-: கட்டுமான நிறுவன காவலாளியிடம், மொபைல் போன் பறித்தவரை போலீசார் கைது செய்தனர். நந்தனம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 20. கட்டுமான நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் பணியில் இருந்த போது, இவரது மொபைல் போனை மர்ம நபர் பறித்து சென்றார். புகாரின்படி, சைதாப்பேட்டை போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், 23, என்பவர், மொபைல் போனை பறித்துச் சென்றது தெரிந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.