உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரியாணி மாஸ்டரிடம் போன் பறித்தவர் கைது

பிரியாணி மாஸ்டரிடம் போன் பறித்தவர் கைது

புதுவண்ணாரப்பேட்டை, சென்னை, அசோக் நகரைச் சேர்ந்தவர் சாதிக்பாஷா, 48; பிரியாணி மாஸ்டர். கடந்த ஏப்., 21ம் தேதி, வண்ணாரப்பேட்டை, வீரராகவன் தெருவில் நடந்து சென்றபோது, டூ - வீலரில் வந்த இருவர், சாதிக்பாஷாவின் மொபைல் போனை பறித்து தப்பினர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, மொபைல் போன் பறிப்பில் தொடர்புடைய, கொளத்துாரைச் சேர்ந்த அந்தோணி, 42, என்பவரை, நேற்று கைது செய்தனர். அவர் மீது, 11 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.விசாரணைக்கு பின், அந்தோணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான மற்றொருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி