உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது

டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது

சென்னை, திருவல்லிக்கேணி, வெங்கடேசபுரம் கெனால் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ் குமார், 29; ஆட்டோ ஓட்டுனர். கடந்த, 17ம் தேதியன்று, திருவல்லிக்கேணி குப்பமுத்து தெருவில் உள்ள செல்வம் மஹாலில், அவரது அண்ணி நிவேதாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.அப்போது, அங்கு வந்த அண்ணாசாலையைச் சேர்ந்த பழைய குற்றவாளி மணிகண்டன், 23 என்பவர், மனோஜ் குமாரிடம் வீண் தகராறு செய்து, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால், தலை, கை, முதுகு, கால் உள்ளிட்ட இடத்தில் குத்தி விட்டு தப்பினார். இதில் படுகாயமடைந்த மனோஜ், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்ணாசாலை போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான மணிகண்டனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை