உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூம் போட்டு யோசித்து 40 சவரன் திருடியவர் கைது

ரூம் போட்டு யோசித்து 40 சவரன் திருடியவர் கைது

முடிச்சூர் :தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், லிங்கம் நகர், குருகிருபா குடியிருப்பில் வசிப்பவர் பாலாஜி, 42; தனியார் நிறுவன மேலாளர். மே 22ல் வழக்கம் போல் வேலைக்கு சென்றார்.அவரது மனைவி மகேஸ்வரி, தன் குழந்தைகளை டியூஷனுக்கு அழைத்து சென்றார்.டியூஷன் முடிந்து, மதியம் 12:30 மணிக்கு திரும்பி வந்தபோது, கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த,40 சவரன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.பீர்க்கன்காரணை போலீசார் விசாரித்து, திருச்செந்துார், தளவாய்புரத்தை சேர்ந்த பிரபாகரன், 42 என்பவரை கைது செய்தனர். அவர் அடகு வைத்திந்த, 40 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:பிரபாகரன் முக்கிய நகரங்கில் லாட்ஜில் தங்கி, அப்பகுதியில் கைவரிசை காட்டுவது வழக்கம். இந்த முறை செங்கல்பட்டில் தங்கி, சென்னை வந்து திருடியுள்ளார்.பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இவரிடமிருந்து நகைகளை முழுதுமாக மீட்டதில்லை. தற்போதுதான், 40 சவரனையும் மீட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை