மேலும் செய்திகள்
ரயில் மோதி தொழிலாளி பலி
20-Jun-2025
அரும்பாக்கம், அரும்பாக்கம், வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன், 30; ஆட்டோ ஓட்டுனர். இம்மாதம், 18ம் தேதி, அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆட்டோவில் சென்றார். அப்போது, அதே வழியில் ஆட்டோவுடன் நின்ற நபர், காஸ் இல்லாததால் ஆட்டோ நின்றதாக கூறி உதவி கேட்டுள்ளார். தனக்கு, 'டோப்' செய்ய தெரியாது என, தங்கபாண்டியன் கூறியதையடுத்து, அந்த மர்ம நபர் தங்கபாண்டியனின் ஆட்டோவில் அமர்ந்து, 'டோப்' செய்துள்ளார். தங்கபாண்டியன் நின்ற ஆட்டோவில் அமர்ந்து வந்துள்ளார். சிறிது துாரம் சென்ற உடன், தங்கபாண்டியனின் ஆட்டோவை மர்மநபர் வேகமாக ஓட்டி, ஆட்டோவுடன் தப்பினார்.அதிர்ச்சியடைந்த தங்கபாண்டியன், அந்த நபர் விட்டுசென்ற ஆட்டோவை அரும்பாக்கம் போலீசில் ஒப்படைத்து, சம்பவம் குறித்து புகார் அளித்தார்.போலீசார் விசாரித்து ஆட்டோவை திருடிய, அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர், 35 என்பவரை கைது செய்தனர். விசாரணையில், கீழ்ப்பாக்கம் பகுதியில் ஆட்டோ திருடிக் கொண்டு வரும்போது, காஸ் இல்லாமல் வழியிலே நின்றுள்ளது. தங்கபாண்டியனிடம் உதவி கேட்பது போல் நடித்து, அவரது ஆட்டோவை, ராஜசேகர் திருடியது தெரிந்தது. விசாரணைக்கு பின் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். ***
20-Jun-2025