உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி பேட்டரிகளை திருடிய நபர் கைது

லாரி பேட்டரிகளை திருடிய நபர் கைது

வானகரம்,முகப்பேரை சேர்ந்தவர் ராஜா, 40; டிப்பர் லாரி ஓட்டுநர். இவர் கடந்த 4 ம் தேதி அதிகாலை மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு சாலை, எம்.ஜி.ஆர்., பல்கலை அருகே, லாரியை நிறுத்திவிட்டு சென்றார். பின், மதியம் வந்து பார்த்தபோது, லாரியில் பொருத்தப்பட்டிருந்த, இரு பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.வானகரம் போலீசார் விசாரித்து, லாரி பேட்டரிகளை திருடிய, மணலி புதுநகரை சேர்ந்த பார்த்திபன், 35 என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, இரு லாரி பேட்டரிகள், 'டியோ பைக்' ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது, பல்வேறு காவல் நிலையங்களில், 11 திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !