மேலும் செய்திகள்
முதியவரிடம் பணம் பறிப்பு : மூவர் கைது
18-Apr-2025
அண்ணா நகர்,கிழக்கு அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, அரசு தேர்வுக்காக படிப்பவர் கவுதம், 22.இவர், ஏப்., 7ம் தேதி இரவு, தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை விடுதி வாசலில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலையில் பார்த்த போது, வாகனம் திருடுபோனது தெரிந்தது.இதுகுறித்து, அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில், திருமங்கலம், அண்ணா நகர் மேற்கு, 18வது பிரதான சாலையை சேர்ந்த கபிலன், 24, என்பவரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கபிலன், சென்னையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தை திருடி, பதிவு எண்ணை மாற்றி, சொந்த ஊரில் விற்று வந்தது தெரிந்தது.ஏற்கனவே, இவர் மீது ஏழு வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. இவரிடமிருந்து, இரண்டு பல்சர் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.
18-Apr-2025