உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போன் பறித்து தப்ப முயன்றவர் சிக்கினார்

போன் பறித்து தப்ப முயன்றவர் சிக்கினார்

அம்பத்துார், -ஆவடி, நாகம்மை நகரைச் சேர்ந்தவர் சிவகுமார், 35. இவர், சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், சொந்த ஊரான சிவகங்கைக்கு சென்று விட்டு, நேற்று காலை சென்னை திரும்பியுள்ளார்.தாம்பரத்தில் இருந்து தடம் எண்: 104 பேருந்து வாயிலாக, அம்பத்துார், ஓ.டி., பேருந்து நிலையம் வந்தார். அங்கிருந்து, ஆவடி செல்லும் பேருந்தில் ஏறும்போது, அவரிடமிருந்த, 18,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை, அங்கிருந்த நபர் பறித்து ஓடினார். அங்கிருந்தவர்களின் உதவியுடன் சிவகுமார், அந்த நபரை பிடித்து அம்பத்துார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், கொருக்குப்பேட்யைச் சேர்ந்த விநாயகம், 48; பெயின்டர் என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி