மின்மாற்றியில் ஏறியவர் மின்சாரம் பாய்ந்து பலி
கிண்டி, கிண்டியில், குடும்ப பிரச்னை காரணமாக, மின்மாற்றி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர், மின்சாரம் தாக்கி பலியானார்.எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சதீஷ், 45. திருமணமாகாத இவர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் வசிக்கும் இவரது சகோதரி வீட்டுக்கு நேற்று போதையில் சென்றார். அப்போது, சண்டை வரவே அருகில் உள்ள மின்மாற்றியில் ஏறி அமர்ந்து, குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், மின் மாற்றியில் அமர்ந்த நிலையிலேயே அவர் பலியானார். கிண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.