உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

3 வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

ஓட்டேரி, ஆவடி, பருத்திப்பட்டை சேர்ந்தவர் சிவகுமார், 56; வாட்ச் மேன் வேலை செய்து வந்தார். மனைவி தவமணி ஆறு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். குழந்தைகள் இல்லாததால், அண்ணன் பாலாஜிக்கு சொந்தமான வீட்டில், தாயுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, வீட்டின் மூன்றவாது மாடியில், சிவகுமார் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, கால் தவறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.கீழப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து, ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி