உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3வது மாடியில் இருந்து குதித்தவர் உயிரிழப்பு

3வது மாடியில் இருந்து குதித்தவர் உயிரிழப்பு

சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை 'ஸ்டார்' திரையரங்கம் அருகே, 3 அடுக்குமாடி கொண்ட வணிக வளாகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம், 3வது தளத்தில் நின்று கொண்டிருந்த நபர், கீழே செல்லும் வாகனங்கள் மீது கல்வீசி கொண்டிருந்தார்.ஜாம்பஜார் போலீசார் அவரை கீழே இறங்கும்படி கூறினர். அப்போது திடீரென, அந்த நபர் கீழே குதித்தார்.இதில் படுகாயமடைந்தவர், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் நாகாலாந்தைச் சேர்ந்தவர் என்பதும் ,சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அவரது பெற்றோர், உறவினர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை