உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் பாய்ந்து மே.வங்க நபர் பலி

மின்சாரம் பாய்ந்து மே.வங்க நபர் பலி

சேலையூர்:மின்சாரம் பாய்ந்து, மேற்கு வங்க வாலிபர் உயிரிழந்தார். மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் தசதர்லால், 23; கட்டட தொழிலாளி. இவர், தாம்பரம் அருகே சேலையூர் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம், சீனிவாசன் நகரில் தங்கி, வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முதல் மாடியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கட்டடத்தை ஒட்டி சென்ற மின் கம்பியில், எதிர்பாராதவிதமாக தசதர்லால் உரசியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். சோலையூர் போலீசார் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை