உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓட்டு வீட்டில் தலைகீழாக தொங்கியவர் மீட்பு

ஓட்டு வீட்டில் தலைகீழாக தொங்கியவர் மீட்பு

அண்ணா நகர் :ஷெனாய் நகர், அய்யாவு தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்குமார், 52. நேற்று இரவு, தன் வீட்டின் இரண்டாவது மாடி சுவரின் மீது அமர்ந்து, காற்று வாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக தவறி 15 அடி உயரத்திலிருந்து விழுந்தார். அப்போது, கீழே இருந்த ஓடு வீட்டின் கூரையில் விழுந்ததில் அவரது கால், ஓடுகள் தாங்கள் சட்டத்தில் சிக்கியது. இதனால் அவர், அந்தரத்தில் தலைகீழாக தொங்கினார்.சம்பவம் அறிந்து வந்த அண்ணா நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், மகேஷ்குமாரை கயிறு வாயிலாக பத்திரமாக மீட்டனர்.காலில் அடிபட்டதால், அமைந்தகரை உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை