மேலும் செய்திகள்
இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு
12-Jul-2025
குன்றத்துார்:வரதராஜபுரத்தில், பெண்ணை இரும்பு ராடால் தாக்கிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர். குன்றத்துார் அருகே வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தி, 55. இவரது எதிர்வீட்டில் வசிப்பவர் முரளி, 42. ஊராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். புதிதாக வீடு கட்டும் பணியை முரளி துவங்க உள்ளதால், ஜல்லி, மண் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை, வீட்டின் வெளியே கொட்டி வைப்பது குறித்து, வசந்தியிடம் நேற்று முன்தினம் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு, வசந்தி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முரளி, இரும்பு ராடால் வசந்தியை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த வசந்தி, படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மணிமங்கலம் போலீசார், தலைமறைவாக உள்ள முரளியை தேடி வருகின்றனர்.
12-Jul-2025