உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குறைந்த வட்டி, அதிக பணம் ஆசைகாட்டி 87 சவரன் நகை மோசடி செய்தவர் சிக்கினார்

குறைந்த வட்டி, அதிக பணம் ஆசைகாட்டி 87 சவரன் நகை மோசடி செய்தவர் சிக்கினார்

ஆவடி, தங்க நகைகள் அடமானம் வைத்தால், குறைந்த வட்டிக்கு அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரேமலதா, 32. இவருக்கு, கொளத்துார், ஜெயராம் நகரைச் சேர்ந்த ஆனந்தகுமார், 56, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.ஆனந்தகுமார், பூந்தமல்லி, சன்னிதிதெருவில், 'ஸ்ரீ கனக மகாலட்சுமி கோல்டு லோன்' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.கடந்தாண்டு, தங்க நகையை அடமானம் வைத்தால், குறைந்த வட்டிக்கு அதிக பணம் தருவதாக பிரேமலதா உட்பட பலரிடம் ஆசை வார்த்தை கூறி, 87 சவரன் நகைகள்கடந்தாண்டு பெற்று உள்ளார்.இதையடுத்து கடையை பூட்டி தலைமறைவானார். மோசடி செய்த நகையின் மதிப்பு 70 லட்சம் ரூபாய். ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரேமலதா, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் கடந்தாண்டு புகார் அளித்தார்.விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெரியமேடு பகுதியில் பதுங்கி இருந்த ஆனந்தகுமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை