கஞ்சா வழக்கில் ஜாமின் தப்பி ஓடிய நபர் கைது
சென்னை, சிந்தாதிரிபேட்டை, என்.என்.காலனி அருகே, சிந்தாதிரிபேட்டை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது கஞ்சா வைத்திருந்த, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த அருண்குமார், 24, என்பவரை கைது பிடித்தனர்.இவ்வழக்கு விசாரணை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.ஜாமினில் வெளியே வந்த அருண்குமார், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவு ஆனார். இதனால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், தலைமறைவான குற்றவாளி அருண்குமாரை, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் நேற்று பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.