உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிப்பறி வழக்கில் 3 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது

வழிப்பறி வழக்கில் 3 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது

சென்னை : டெலிவரி ஊழியரை கத்தியால் தாக்கி, 4.45 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில், 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மண்ணடி, மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் அப்தாகீர், 31. தனியார் நிறுவன டெலிவரி ஊழியர். கடந்த, 2022ம் ஆண்டு ஜூன், 9ம் தேதி மாலை தி.நகர் பனகல் பூங்கா அருகே உள்ள ஏ.டி.எம்.,மையத்தில், 4.45 லட்சம் ரூபாயை 'டெபாசிட்' செய்ய சென்றார். ஏ.டி.எம்.,இயந்திரம் பழுதாக இருந்ததால் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார். தி.நகர், ஜி.என்., செட்டி சாலை மேம்பாலத்தில் சென்றபோது அவரை பின் தொடர்ந்து 2 இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் வழிமறித்தனர். கத்தியால் அவரை தாக்கிவிட்டு அவரிடமிருந்த, 4.45 லட்சம் ரூபாயை பறித்து தப்பினர். இதுகுறித்து அப்துல் அப்தாகீர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்ட, சாருஹாசன், ரகுமான், உதயகுமார், ஷேக் அப்துல்லா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில், மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கிழக்கு தாம்பரம் இரும்புலியூரைச் சேர்ந்த வெங்கடேசன், 29 என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் மீது, 23 குற்ற வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி