உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நண்பனை கொன்றவர் போலீசில் சரண்

நண்பனை கொன்றவர் போலீசில் சரண்

கொளத்துார்:கொளத்துார், திருமலை நகர் 200 அடி சாலை பகுதியில் டீக்கடை வைத்துள்ளவர் அப்துல்லா, 40. இவரது நண்பர் அமீத் பாட்ஷா, 42.மதுபோதைக்கு அடிமையான அமீத் பாட்ஷா 'நண்பன் நன்றாக இருக்க, நாம் மட்டும் இப்படி ஆகிவிட்டோமே' என, புலம்பி வந்துள்ளார்.நேற்று மதியம் கடையில் வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்த அப்துல்லாவிடம் சென்று, 'எனக்கு தொழில் செய்ய ஏதாவது உதவி செய்; இல்லையென்றால் உன்னையும், உன் குடும்பத்தையும் கொன்று விடுவேன்' என மிரட்டியுள்ளார். ஆத்திரமடைந்த அப்துல்லா, கத்தியால் அமீத் பாட்ஷாவை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அமீத் பாட்ஷா, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிரிழந்தார். அப்துல்லா, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று மாலை சரண் அடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி