உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மணப்பாக்கம் பள்ளி மாணவன் மாநில நீச்சல் போட்டியில் அசத்தல்

மணப்பாக்கம் பள்ளி மாணவன் மாநில நீச்சல் போட்டியில் அசத்தல்

சென்னை,எஸ்.ஆர்.எம்., நிறுவனர் கோப்பைக்கான நீச்சல் போட்டியில், மணப்பாக்கம் ஒமேகா பள்ளி மாணவன் முதலிடம் பெற்றார். காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனர் கோப்பை நீச்சல் போட்டியில், சிறுவர் சிறுமியருக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நேற்று நடந்தன. இதில், சென்னை, காஞ்சிபுரம், கடலுார், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். இதில், 7, 10, 12, 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமியருக்கு, தனித்தனியாக 25 மீ., 50 மீ., ப்ரீஸ்டைல், பேக்ஸ்டோக் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர்கள், 12 வயது, 50 மீ., ப்ரீஸ்டைல் பிரிவில், மணப்பாக்கம் ஒமேகா பள்ளி மாணவர் சர்வேஷ், போட்டியின் துாரத்தை, 1.05.71 நிமிடத்தில் கடந்து, முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். அதே மாணவன், 25 மீ., பிரிவிலும், 24.79 வினாடியில், கடந்து தங்கம் வென்றார். கடலுார், செயின்ட் மேரிஸ் பள்ளியின் குணஸ்ரீ, 10 வயதுக்கு உட்பட்ட ப்ரீஸ்டைல் பிரிவில், 25 மீ., மற்றும் பேக் ஸ்டோக் பிரிவில், 25 மீ., பிரிவிலும் முதலிடங்களை பிடித்து, தலா ஒரு தங்கம் வென்றார். அண்ணா நகர், எஸ்.பி.ஓ.ஏ., மாணவன் கயன், 50 மீ., ப்ரிஸ்டைல் தங்கம், மறைமலை நகர், கே.ஆர்.கே., பள்ளி அமிர்தாம்பா, பெருங்களத்துார், எஸ்.எஸ்.எம்., பள்ளி தர்ஷன் சாய் வெவ்வேறு பிரிவுகளில் முதலிடங்களை தட்டிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ