உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உலக வலு துாக்கும் போட்டி மாங்காடு பெண் பங்கேற்பு

உலக வலு துாக்கும் போட்டி மாங்காடு பெண் பங்கேற்பு

சென்னை: தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் உலக அளவிலான வலு துாக்கும் போட்டியில், மாங்காட்டையை சேர்ந்த வீராங்கனை பங்கேற்றுள்ளார். சர்வதேச வலு துாக்கும் கூட்டமைப்பு ஏற்பாட்டில், உலக மாஸ்டர்ஸ் வலு துாக்கும் போட்டி, தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் நகரில் நடந்து வருகிறது. இதில், இந்தியா உட்பட, 35 நாடுகளை சேர்ந்த, 488 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். பல்வேறு எடை பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. இந்தியா சார்பில், மொத்தம் 20 வீரர் - வீராங்கனையர் களமிறங்கியுள்ளனர். இதில், தமிழ்நாடு வலு துாக்கும் சங்கம் சார்பில், சென்னை மாங்காட்டை சேர்ந்தவீராங்கனை அமுதசுகந்தி, 43, என்பவர், 69 கிலோ எடை பிரிவில் பங்கேற்கிறார். தமிழகத்தில் இருந்து பங்கேற்கும் ஒரே பெண் என்ற பெருமை படைத்துள்ளார். 'போட்டியில் வென்று, பதக்கங்களுடன் நாடு திரும்புவேன்' என, அவர் உறுதியளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை