உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மஞ்சுளா முனிரத்தினம் கிரிக்கெட் பைலுக்கு ஆர்.எம்.கே., தகுதி

மஞ்சுளா முனிரத்தினம் கிரிக்கெட் பைலுக்கு ஆர்.எம்.கே., தகுதி

சென்னை:மஞ்சுளா முனிரத்தினம் கிரிக்கெட் போட்டியில், நேற்றைய முதல் அரையிறுதியில், ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி, 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி சார்பில், மஞ்சுளா முனிரத்தினரம் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் உள்ள கல்லுாரி மைதானத்தில் நடக்கின்றன.இதில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா, அண்ணா பல்கலை, ஆர்.எம்.கே., - ஆர்.எம்.டி., - சத்தியபாமா, சவீதா, வி.ஐ.டி., மற்றும் லயோலா உள்ளிட்ட, 19 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று காலை நடந்த முதல் அரையிறுதியில், ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி மற்றும் சாய்ராம் கல்லுாரி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆர்.எம்.கே., அணி, முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 170 ரன்களை அடித்தது. அணியின் வீரர் சுதர்சன், 54; விக்ணேஷ், 43 ரன்கள் அடித்தனர். அடுத்து பேட்டிங் செய்த, சாய்ராம் கல்லுாரி, 19.5 ஓவர்கள் வரை போராடி, அனைத்து விக்கெட் இழந்து, 53 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. இதனால், 117 ரன்கள் வித்தியாசத்தில், ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டி, 15ம் தேதி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை