மேலும் செய்திகள்
ஸ்வரங்களை நீட்டி விவரித்த சங்கீதா
20-Dec-2024
மன்னர் காலத்தில் ராஜ சபைகளில் ஒலித்ததாக கருதப்படும் தர்பார் ராகம், தி.நகர் வாணி மஹாலில், சுப்தரா ஸ்ரீதரன் குரலில் ரம்மியமாக ஒலித்தது.'சாலா மேலா' என்ற திருவொற்றியூர் தியாகய்யர் இயற்றிய வர்ணத்தை கொண்டு, அதற்கு வர்ணம் பூச துவங்கினார்.பின், சக்கரவாகம் ராகத்தை ஆலாபனையா இவர் வழங்க, அதை திறம்பட தன் வயலினில் இசைத்து வெளிப்படுத்தினார் பார்கவ் விக்னேஷ்.சுவாதி திருநாள் ஆதி தாளத்தில் இயற்றிய இக்கிருதிக்கு, கற்பனை ஸ்வர்களுடன் கோர்வைகளையும் பாடி அழகூட்டினார்.ராமசந்திரனைப் போற்றி, ரவிசந்திரிக்கா ராகம், ஆதி தாளத்தில் தியாகராஜர் இயற்றிய 'மகேலரா விசாரமு' என்ற பாடலை சிறப்பான முறையில் அரங்கேற்றினார். அனைவராலும் விரும்பப்படும், கல்யாணி ராக ஆலாபனையை, மிக நுட்பமாக பாடினார்.'பஜரே ரே சித்த' எனும் முத்துசுவாமி தீட்சிதரின் கிருதியை, பிரதான உருப்படியாக எடுத்துக்கொண்டார். ராக முத்திரையை, மிஸ்ர சாபு தாளத்தில், இக்கிருதியில் வழங்கி, நிரவல் பகுதியை 'தேவீம் ஸக்தி பீஜோத் பவ'யில் பாடினார்.கற்பனை ஸ்வரங்கள், குறப்பு ஸ்வரங்கள், சர்வலகு மற்றும் கோர்வை என தொடுத்து சபையினருக்கு மாலையாக வழங்கினார்.பின் கோல்கட்டா வெங்கடராமன், தனி ஆவர்த்தனத்தில் அரங்கை சூடேற்றினார். கிருஷ்ணப் பெருமானை மையமாக கொண்டு, புரந்தரதாசர் இயற்றிய 'ஜகதோதாரனா' என்ற பாடலை காபி ராகம், ரெட்டைக்களை ஆதி தாளத்தில் வழங்கினார்.'ஹரி மேரோ ஜீவன்' எனும் மீரா பஜனையும், பின் பேஹாக் ராகத்தில் 'முருகனின் மறுப் பெயர் அழகு' எனும் பாடலையும் திறம்பட பாடினார். இறுதியில் தில்லானா பாடி நிறைவு செய்தார்.- ரா.பிரியங்கா.
20-Dec-2024