இன்ஜின் ஆயில் ஊற்றி தீக்குளித்த மெக்கானிக் பலி
புளியந்தோப்பு:புளியாந்தோப்பு, வி.ஓ.சி., நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சலாம், 45; பைக் மெக்கானிக். இவரது மனைவி, நசீரா பேகம், 39. இவர்களுக்கு, 10 வயதில் மகள் உள்ளார்.இந்நிலையில், மகளை டியூசனில் விட்டுவிட்டு அப்துல் சலாம், நசீரா பேகம் இருவரும், நேற்று மதியம் வீடு திரும்பி கொண்டிருந்தனர். நசீரா கடைக்கு செல்ல, அப்துல் சலாம் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது, வீட்டில் இருந்த பைக் இன்ஜின் ஆயிலை எடுத்து, தன் மீது ஊற்றி பற்றவைத்துள்ளார். அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, 80 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த அப்துல் சலாம், நேற்று மாலை உயிரிழந்தார். புளியந்தோப்பு போலீசார் விசாரித்தனர்.அதில், அப்துல் சலாம் குடியிருக்கும் வீட்டை, அவரது மனைவியின் அக்கா வாங்கி விட்டதாகவும், மூன்று மாதத்தில் வீட்டை காலி செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டதால், மன உளைச்சலில் இருந்தவர் தற்கொலை செய்தது தெரிந்தது.