உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வளர்சிதை மாற்ற நல மையம் காவேரியில் துவக்கம்

 வளர்சிதை மாற்ற நல மையம் காவேரியில் துவக்கம்

சென்னை: வாழ்க்கை முறை சார்ந்த நோய்களுக்கான ஒருங்கிணைந்த வளர்சிதை மாற்ற நல மையம் ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில், வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேஷ் துவக்கி வைத்தார். இதுகுறித்து, மருத்துவமனையின் செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்புகளை தனித்தனி பிரச்னைகளாக மக்கள் கருதுகின்றனர். அவை அனைத்தும் வளர்சிதை மாற்ற குறைபாடுகளால்தான் உருவாகின்றன. அதைக் கருதி, இம்மையம் துவக்கப்பட்டுள்ளது. இங்கு அந்நோய்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், துவக்க நிலை சிகிச்சைகளை வழங்கவும், வருமுன் தடுப்பதற்கான வழிமுறைகளை அளிக்கவும் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்துள்ளோம். ஆரோக்கியமான வளர்சிதை மாற்றமே ஒட்டுமொத்த நலவாழ்வுக்கான ஆதாரம் என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ