உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோடம்பாக்கம் பவர் ஹவுஸ்சில் மெட்ரோ நிலைய பணி துவக்கம்

கோடம்பாக்கம் பவர் ஹவுஸ்சில் மெட்ரோ நிலைய பணி துவக்கம்

சென்னை, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில், மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் இடையே ஒரு வழித்தடமாக மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை மேம்பால பாதையாகவும் அமைக்கப்படுகிறது.இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி தடத்தில், 26.1 கி.மீ., மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. இதில், 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இதில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில், 22 மீட்டர் அகலத்திலும், 140 மீட்டர் நீளத்திலும் மேம்பால மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணியை துவங்கி உள்ளோம். நான்கு லிப்ட், ஒன்பது எஸ்கலேட்டர்கள் போன்ற பயணியருக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.பூந்தமல்லி -- கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் -- பூந்தமல்லி வரையிலான மேம்பால பாதையில், 55 சதவீதம் கட்டுமானப்பணிகள் முடிந்து உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ