மேலும் செய்திகள்
கொட்டும் மழையிலும் தீபத்திருவிழா கோலாகலம்
1 minutes ago
ஆசிய பவர் லிப்டிங்கில் மாங்காடு வீராங்கனை
4 minutes ago
நீதிபதி காலி பணியிடம் நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
18 hour(s) ago
சென்னை: விமான பயணத்தின் போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியை, எம்.ஜி.எம்., புற்று நோய் மருத்துவமனை டாக்டர்கள் காப்பாற்றினர். இதுகுறித்து, அம் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: ஆப்ரிக்காவின் எத்தியோப்பிய நாட்டில் நடந்த மருத்துவ மாநாட்டில் பங்கேற்ற எம்.ஜி.எம்., புற்றுநோய் மருத்துவ மனையைச் சேர்ந்த டாக்டர் கோபிநாதன், சுதர்சன் பாலாஜி ஆகியோர், இந்தியா திரும்புவதற்காக, அடிஸ் அபாபா நகரில் இருந்து அபுதாபிக்கு 'எத்திஹாட்' விமானத்தில் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்டு, 40 நிமிடங்கள் ஆன பின், விமான பணியாளர் குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு உணவு மற்றும் காற்று மாசால் உண்டாகும் ஒவ்வாமை ஏற்பட்டது. இப்பாதிப்பு இருந்தால் ரத்த அழுத்தம் கடுமையாக குறைவதுடன், மூச்சுப்பாதையும் மிகவும் சுருங்கி விடும். அதனால் அவரது நுரையீரலுக்கு செல்லக்கூடிய மூச்சுக் காற்று குறைந்ததுடன், ஆக்சிஜன் செறிவு நிலை, 80 சதவீதமாக குறைந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விமான பணியாளருக்கு உடனடி சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால், விமானத்தை மீண்டும் தரையிறக்க முடியாத நிலையில், அதில் பயணித்த எம்.ஜி.எம்., டாக்டர்கள், விமான பணியாளருக்கு உடனடி சிகிச்சை அளித்தனர். அதன்படி, ஸ்டீராய்டு மருந்துகளை வழங்கி, காற்றுப்பாதையில் மூச்சுக்காற்று செல்வதை மேம்படுத்துவதற்கான சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சையில் அவர் குணமடைந்தார். இவ்வாறு அவர் கூறினார்.
1 minutes ago
4 minutes ago
18 hour(s) ago