உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை பல்கலை நிதி நெருக்கடி பதிவாளருடன் பேச அமைச்சர் முடிவு

சென்னை பல்கலை நிதி நெருக்கடி பதிவாளருடன் பேச அமைச்சர் முடிவு

சென்னை, ''அரசு நலத்திட்ட உதவிகளை, தேர்தலுக்கு முன் மக்களுக்கு வழங்க வேண்டும்,'' என, அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டார்.அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் பணி ஆய்வுக் கூட்டம், நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலக கூட்டரங்கில் நடந்தது.கூட்டத்தில், அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர்கள், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன், அரசு திட்டப் பணிகளை துவக்க வேண்டும். காலை உணவு, மதிய உணவு பள்ளியில் வழங்கப்படுவதால், விடுதிக்கு மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது. அதை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, மாணவர்கள் வருகைக்கு ஏற்ப நிதி ஒதுக்க வேண்டும். விடுதிக் காப்பாளர்கள் மனசாட்சியோடு வேலை செய்ய வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு விரைவாக கடன் வழங்குங்கள். சைக்கிள், தையல் இயந்திரம் வழங்கும் பணியை, தேர்தலுக்கு முன் வழங்குங்கள். அனைத்து உதவிகளும் மக்களை சென்றடைய வேண்டும். பணியை செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.சென்னை பல்கலை நிதி நெருக்கடி குறித்த கேள்விக்கு, ''பல்கலை பதிவாளரை அழைத்து பேச உள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ